தமிழ் பழமொழிகள்

தமிழ் பழமொழிகள்

 1. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
 2. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
 3. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
 4. ஆழமறியாமல் காலை இடாதே
 5. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
 6. அடியாத மாடு பணியாது
 7. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
 8. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்
 9. அழுகிற பிள்ளை பால் குடிக்கும்
 10. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
 11. இளங்கன்று பயமறியாது
 12. இறைத்த கிணறு ஊறும், இறையாத கேணி நாறும்
 13. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
 14. தனி மரம் தோப்பாகாது
 15. தன் வினை தன்னைச் சுடும்
 16. தருமம் தலைகாக்கும்
 17. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
 18. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை
 19. கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்
 20. காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்
 21. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
 22. விளையும் பயிர் முளையிலே தெரியும்
 23. நாய் வாலை நிமிர்த்த முடியாது
 24. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
 25. புயலுக்குப் பின்னே அமைதி
 26. வெறுங்கை முழம் போடுமா
 27. வீட்டில் எலி வெளியில் புலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *