தமிழ் பழமொழிகள்
தமிழ் பழமொழிகள்
Tamil Proverbs
சிறந்த பழமொழிகள்
-
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
-
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
-
அடங்க தெரியாதவனுக்கு ஆள தெரியாது ( He is not fit to command others , that cannot command himself)
-
ஆபத்துக்கு உதவுபவனே உண்மையான நண்பன் ( A friend in need is a friend indeed)
-
அப்பன் அருமை செத்தால் தெரியும்
-
அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும் (It is better to be the hammer than the anvil)
-
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு
-
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
-
ஆழமறியாமல் காலை இடாதே
-
ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும்
-
ஆவதும் பெண்னாலே, அழிவதும் பெண்னாலே!
-
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
-
அடியாத மாடு பணியாது
-
அறிவு தன் விலை அறியும்(Knowledge finds its price)
-
அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும்
-
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
-
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்
-
அழுகிற பிள்ளை பால் குடிக்கும்
-
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
-
இளங்கன்று பயமறியாது
-
இறைத்த கிணறு ஊறும், இறையாத கேணி நாறும்
-
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
-
தற்பெறுமை பேசாதே (Never blow your own trumpet)
-
தனி மரம் தோப்பாகாது
-
தன் வினை தன்னைச் சுடும்
-
தருமம் தலைகாக்கும்
-
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
-
துணை போனாலும் பிணை போகாதே
-
துருப்பிடிப்பதை விட தேய்ந்து போவது மேல்
-
களவும் கற்று மற
-
கல்லாதவரே கண்ணில்லாதவர்
-
கரும்பும் எள்ளும் கசக்கினால் தான் பலன்
-
கலையும் அறிவும் தரும் உணவும் மதிப்பும்(Art and knowledge bring Bread and honor)
-
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
-
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்
-
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை
-
கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?
-
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்
-
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்
-
காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது
-
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
-
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு (A drunkard’s words are gone by the next dawn)
-
குந்தித் தின்றால் குன்றும் மாளும்
-
குற்றமுள்ள நெஞ்ச குறு குறுக்கும்
-
கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்
-
கோல் ஆட, குரங்கு ஆடும்
-
சாவுக்கு அஞ்சுபவன் வாழான் (He that fears death lives not)
-
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
-
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி
-
நச்சுக்காற்று நன்மை தராது ( It is an ill wind that blows nobody good)
-
நடக்கமாட்டாத லவாடிக்கு நாலுபக்கமும் சவாரி
-
நாய் வாலை நிமிர்த்த முடியாது
-
நாற்பது வயதில் நாய் குணம் அறுபது வயதில் பேய் குணம்
-
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
-
மன்னனுக்கு என்றும் மரணம் இல்லை (The king never dies)
-
முட்டாள்களை அதிர்ஷ்டம் முட்டும் (Fortune favours fortune)
-
பந்திக்கு முந்து, படைக்கு பிந்து
-
பதறிய காரியம் சிதறிப் போகும் (Haste makes waste)
-
பசி வந்தால் பத்தும் பறக்கும்
-
பந்திக்கு முந்து, படைக்கு பிந்து
-
புயலுக்குப் பின்னே அமைதி
-
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
-
வெறுங்கை முழம் போடுமா
-
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
-
விளையும் பயிர் முளையிலே தெரியும்
-
விருந்தும் மருந்தும் மூன்று நாள்
-
வீட்டுக்கு வீடு வாசப்படி
-
வீட்டில் எலி வெளியில் புலி
-
ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று
தமிழ் கிராமத்து பழமொழிகள்
தமிழ் பழமொழிகள்