பொங்கல் பண்டிகை சிறப்பு
பொங்கல் பண்டிகை சிறப்பு
Few points About Pongal Festival
தை 1-ம் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையில் ஒன்று
பொங்கல் சங்க காலத்தில் இருந்து கொண்டாடப்படும் ஒரு பழமையான பண்டிகை
தமிழர்களின் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும்
தை மாதம் முதல் நாள் தொடங்கி நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல்
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது
கபடி,வழுக்கு மரம்,பானை உடைத்தல் போன்ற விளையாட்டுகளை மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள்
நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை
போகி பொங்கல்
தைப்பொங்கல்
மாட்டுப்பொங்கல்
காணும் பொங்கல்
போகி பண்டிகை
பொங்கலுக்கு முதல்நாள் அதாவது மார்கழி கடைசி நாள் (மார்கழி 29-ம் தேதி)போகி பண்டிகை கொண்டாடப்படும்
பழையவற்றை போக்கி, வீட்டை தூய்மை படுத்துவதே போகி பொங்கல்
தேவையில்லாத பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்
தைப்பொங்கல்
தைமாதம் முதல்நாள் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது
புதிதாக அறுவடை செய்த அரிசியுடன் (பச்சரிசி), பால், சர்க்கரை/வெல்லம், நெய், முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்துப், சமைத்த பொங்கலை மக்கள்’ சூரிய பகவானுக்கு வழங்கி நன்றி தெரிவிப்பார்கள்
சமைத்த பொங்கலை மக்கள் அனைவருக்கும் கொடுத்து பகிர்ந்து மகிழ்வார்கள்
மாட்டுப்பொங்கல்
தைமாதம் 2-ம் நாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது
இந்நாளில் விவசாயத்திற்கு உதவிய கால்நடைகளை கொண்டாடும் பண்டிகை
மாடுகளை குளிக்கவைத்து அலங்காரம் செய்து ,கொம்புகளுக்கு வண்ணம் பூசி வைக்கப்படும் பொங்கலே மாட்டுபொங்கலாகும்
இந்நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு சில இடங்களில் நடைபெறும்
காணும் பொங்கல்
நான்காம் நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது
குடும்ப உறவினர்களுடன் நண்பர்களும் சந்தோஷமாக நேரத்தை செலவிடுவார்கள்
HAPPY PONGAL
பொங்கல் பண்டிகை 2023
பொங்கல் பண்டிகை சிறப்பு
2 thoughts on “பொங்கல் பண்டிகை சிறப்பு”